வீடுகளில் பொதுமக்கள் தேசிய கொடி ஏற்றினர்


வீடுகளில் பொதுமக்கள் தேசிய கொடி ஏற்றினர்
x

75-வது சுதந்திர தின விழாவையொட்டி வீடுகளில் பொதுமக்கள் தேசிய கொடி ஏற்றி செல்பி எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்து மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர்.

கடலூர்

தேசிய கொடி ஏற்றம்

நாட்டின் 75-வது சுதந்திர தின விழாவை கோலாகலமாக கொண்டாட வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்தது. அதன்படி வீடு, அலுவலகங்களிலும் 3 நாட்கள் தேசிய கொடியை ஏற்றி பறக்க விட வேண்டும் என்று தெரிவித்து இருந்தது. அதன் படி நேற்று நாடு முழுவதும் வீடு, அலுவலகங்களில் தேசிய கொடி ஏற்றப்பட்டது.

கடலூர் மாவட்டத்திலும் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் தேசிய கொடியை ஏற்றி மகிழ்ச்சி அடைந்தனர். அரசு, தனியார் அலுவலகங்களிலும் அதிகாரிகள், ஊழியர்கள் தேசிய கொடியை ஏற்றினர். பின்னர் அதை செல்பி எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்து மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர்.

விற்பனை

இதன் காரணமாக சிறிய அளவிலான தேசிய கொடி முதல் பெரிய அளவிலான தேசிய கொடி வரை விற்பனை அதிகரித்துள்ளது. ஏற்கனவே தபால் நிலையங்களில் ரூ.25-க்கு தேசிய கொடி விற்பனை செய்யப்பட்டது. மாநகராட்சி சார்பில் ரூ.10-க்கு தேசிய கொடி வீடு, வீடாக வினியோகம் செய்யப்பட்டது. இது தவிர சிறிய கடை முதல் பெரிய கடைகளிலும் தேசிய கொடி விற்பனை சூடுபிடித்துள்ளது. வீடு, அலுவலகங்கள் என அனைத்து இடங்களிலும் தேசிய கொடி பறக்கிறது.


Next Story