திருவாரூர் கடைவீதியில் பொருட்கள் வாங்க குவிந்த மக்கள்


திருவாரூர் கடைவீதியில் பொருட்கள் வாங்க குவிந்த மக்கள்
x

விநாயகர் சதுர்த்தியையொட்டி திருவாரூர் கடைவீதியில் பொருட்கள் வாங்க மக்கள் குவிந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

திருவாரூர்


விநாயகர் சதுர்த்தியையொட்டி திருவாரூர் கடைவீதியில் பொருட்கள் வாங்க மக்கள் குவிந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

விநாயகர் சதுர்த்தி விழா

இந்துக்கள் கொண்டாடும் பண்டிகைகளில் விநாயகர் சதுர்த்தி விழா முக்கியமானது. ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாத தேய்பிறை சதுர்த்தி நாளான்று விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது.

அதன்படி இந்த ஆண்டு இன்று (புதன்கிழமை) விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது.

கூட்டம் அலைமோதியது

விநயாகர் சதுர்த்தி விழாவையொட்டி பொருட்கள் வாங்க திருவாரூர் கடைவீதியில் மக்கள் கூட்டம் அலைமோதியது. விநாயகருக்கு படையலிட பழங்கள், பூ மற்றும் மளிகை பொருட்கள் வாங்க கடைகளில் மக்கள் குவிந்தனர்.

பொருட்கள் வாங்க பொதுமக்கள் வாகனங்களில் வந்ததால் கடை வீதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

ஆர்வமுடன் வாங்கி சென்றனர்

சாலையோரங்களில் விநாயகர் சிலைகள் விற்பனை செய்யப்பட்டன. களிமண்ணில் தயார் செய்யப்பட்டு வர்ணம் பூசப்பட்ட விநாயகர் சிலை ஒன்று ரூ.100 முதல் ரூ.200 வரை விற்பனை செய்யப்பட்டது

மேலும் விநாயகர் சிலைக்கு அழகிய வண்ணங்களில் குடைகள் விற்பனை செய்யப்பட்டன. இவை ஒன்று ரூ.40, ரூ.50 என்ற விலையில் விற்கப்பட்டது.. இதனை மக்கள் ஆர்வத்துடன் வாங்கி சென்றனர்.


Next Story