ஆபத்தான வளைவில் வேகத்தடை அமைக்கப்படுமா?


ஆபத்தான வளைவில் வேகத்தடை அமைக்கப்படுமா?
x
தினத்தந்தி 8 March 2023 12:45 AM IST (Updated: 8 March 2023 12:45 AM IST)
t-max-icont-min-icon

கூத்தாநல்லூர் அருகே ஆபத்தான வளைவில் வேகத்தடை அமைக்கப்படுமா? என வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கிறார்கள்.

திருவாரூர்

திருவாரூர், மன்னார்குடி வழித்தடத்தில் கூத்தாநல்லூர் அருகே சாலையில் இடையில் உள்ளது மூலங்குடி கிராமம். இந்த மூலங்குடி கிராமத்தையொட்டிய சாலையில் எருக்காட்டூர் பிரிவு சாலை எதிரே ஆபத்தான வளைவு உள்ளது. இந்த ஆபத்தான வளைவில் திருவாரூர், மன்னார்குடி மற்றும் எருக்காட்டூர் செல்லக்கூடிய 3 பிரிவு சாலைகள் உள்ளதால் எதிர் எதிரே வரும் வாகனங்கள் எளிதில் தெரிவதில்லை. அங்கு உள்ள ஆபத்தான வளைவு வாகன ஓட்டிகளுக்கு சிரமத்தை ஏற்படுத்தி வருகிறது. அடிக்கடி விபத்தும் ஏற்படுகிறது. எனவே ஆபத்தான வளைவில் சாலையில் இரு புறமும் வேகத்தடை அமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கிறார்கள்.


Next Story