ஊராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை


ஊராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
x
தினத்தந்தி 7 July 2023 1:15 AM IST (Updated: 7 July 2023 1:15 AM IST)
t-max-icont-min-icon

செம்பட்டி அருகே ஊராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

திண்டுக்கல்

செம்பட்டி அருகே ஆத்தூரில் மேற்கு தெரு, வடக்கு தெரு, வெள்ளாளர் தெரு, நாயுடு தெரு, கள்ளர் தெரு, ஆலம்பட்டி, அக்ரஹாரம் தெரு, மாலம்பட்டி, பத்திர ஆபீஸ் தெரு, மாதா கோவில் தெரு உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் நேற்று ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அப்போது தங்கள் பகுதியில் உள்ளவர்களுக்கு 100 நாள் வேலை வழங்க வேண்டும் என்று கோஷமிட்டனர். பின்னர் ஊராட்சி மன்ற அலுவலகத்துக்குள் சென்று அங்கு இருந்த துணைத் தலைவர் சையது அபுதாகீர், ஊராட்சி செயலர் கண்ணன் மற்றும் வார்டு உறுப்பினர்களிடம் பொதுமக்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் ஆத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தட்சிணாமூர்த்தி, லாரன்ஸ், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஹேமலதா, முருகன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது 100 நாள் வேலையில் முறைகேடு நடைபெறுவதாக புகார் கூறினர். இதுகுறித்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கூறினார். இதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Related Tags :
Next Story