குடிநீர் கேட்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை


குடிநீர் கேட்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
x

குடிநீர் கேட்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

திருச்சி

முசிறியை அடுத்த செவந்தாலிங்கபுரம் கிராமம் 9-வது வார்டில் உள்ள மக்களுக்கு கடந்த 20 நாட்களாக குடிநீர் குழாயில் தண்ணீர் வரவில்லையாம். இதனால் பெரிதும் அவதி அடைந்த அப்பகுதிமக்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதனை அறிந்த ஊராட்சி ஒன்றிய ஆணையர் (கிராம ஊராட்சி) ராஜ்மோகன், முற்றுகையிட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, உடனே நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இதனை ஏற்றுக்கொண்ட அவர்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இந்த போராட்டத்தில் 20 பெண்கள் உள்பட 25-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.


Next Story