அ.தி.மு.க.வுக்கு வாக்களிக்க மக்கள் தயாராகி விட்டனர்
எப்போது தேர்தல் வந்தாலும் அ.தி.மு.க.வுக்கு வாக்களிக்க மக்கள் தயாராகி விட்டனர் என முன்னாள் அமைச்சர் கே.டி.ராேஜந்திரபாலாஜி கூறினார்.
சிவகாசி,
எப்போது தேர்தல் வந்தாலும் அ.தி.மு.க.வுக்கு வாக்களிக்க மக்கள் தயாராகி விட்டனர் என முன்னாள் அமைச்சர் கே.டி.ராேஜந்திரபாலாஜி கூறினார்.
பொதுக்கூட்டம்
விருதுநகர் மேற்கு மாவட்டத்துக்கு உட்பட்ட சிவகாசி சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. சார்பில் அ.தி.மு.க. 51-வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் சித்துராஜபுரத்தில் நடைபெற்றது. சிவகாசி சட்டமன்ற தொகுதி பொதுக்குழு உறுப்பினர் பாலாஜி தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் ராஜவர்மன், சந்திரபிரபா முத்தையா, மாவட்ட இளைஞரணி செயலாளர் பிலிப்வாசு, மாவட்ட பொருளாளர் தேன்ராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசியதாவது:-
அ.தி.மு.க. தொடங்கி 50 ஆண்டுகள் ஆகிறது. எந்த தேர்தலையும் சந்திக்கும் பக்குவம் தற்போது அ.தி.மு.க.வினரிடையே ஏற்பட்டுள்ளது.
ரெயில்வே பாலம்
சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. எதற்காக தோற்றது என்ற காரணம் இன்னும் தெரியவில்லை. அதே நேரத்தில் தி.மு.க. எப்படி வெற்றி பெற்றது என்றும் தெரிய வில்லை. கடந்த 14 மாத ஆட்சியில் இந்த பகுதியில் எந்த வளர்ச்சி பணிகள் நடந்து இருக்கிறதா?.
ஆனால் அ.தி.மு.க. ஆட்சியில் விருதுநகர் மாவட்டம் வளர்ச்சி அடைந்தது. விருதுநகரில் மருத்துவக்கல்லூரி, சிவகாசி, சாத்தூர், அருப்புக்கோட்டை, ஸ்ரீவில்லிபுத்தூரில் கலை,அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்பட்டது. அ.தி.மு.க. ஆட்சியில் அறிவிக்கப்பட்ட ரெயில்வே பாலம் அமைக்கும் பணி இன்னும் தொடங்கப்படாமல் இருக்கிறது. தி.மு.க. ஆட்சியில் மக்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள்.
மக்கள் தயார்
எப்போது தேர்தல் வந்தாலும் அ.தி.மு.க.வுக்கு வாக்களிக்க மக்கள் தயாராகி விட்டனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் நடிகை விந்தியா, மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வசந்திமான்ராஜ், மாவட்ட கவுன்சிலர் நர்மதாஜெயக்குமார், வக்கீல் முத்துப்பாண்டி, பாபுராஜ், ஒன்றிய செயலாளர்கள் கருப்பசாமி, விஸ்வநத்தம் ஆரோக்கியராஜ், வெங்கடேஷ், பகுதி செயலாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, கருப்பசாமிபாண்டியன், சாம், மாநகராட்சி கவுன்சிலர் கரைமுருகன், ஒன்றிய கவுன்சிலர் சுடர்வள்ளி சசிக்குமார், திருத்தங்கல் ராதா மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் மணிகண்டன் நன்றி கூறினார்.