சாலையில் சுற்றித்திரியும் குதிரைகளால் பொதுமக்கள் அச்சம்


சாலையில் சுற்றித்திரியும் குதிரைகளால் பொதுமக்கள் அச்சம்
x

சாலையில் சுற்றித்திரியும் குதிரைகளால் பொதுமக்கள் அச்சம்

தஞ்சாவூர்

தஞ்சை மாநகரில் சாலைகளில் சுற்றித்திரியும் குதிரைகளால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். சில நேரங்களில் வாகனங்களில் செல்வோரையும் இந்த குதிரைகள் கீழே தள்ளி விட்டுவிட்டு செல்கின்றன.

சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகள்

தஞ்சை மாநகரில் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகின்றன. இதனை தவிர்க்க ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு சாலையும் விரிவுபடுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் போக்குவரத்துக்கு இடையூறாக கால்நடைகளும் சுற்றித்திரிந்த வண்ணம் உள்ளன.

தஞ்சை மாநகரில் பல்வேறு இடங்களில் ஆடு, மாடு, நாய்கள், குதிரைகள் போன்ற கால்நடைகளை வளர்ப்பவர்கள் அதனை கட்டி வைக்காமல் அவிழ்த்து விடுவதால் அது சாலைகளில் சுற்றித்திரிகின்றன. குறிப்பாக தஞ்சை சீனிவாசபுரம், மருத்துவக்கல்லூரி சாலை, அரண்மனை பகுதி, புதிய பஸ் நிலையம் செல்லும் சாலை உள்ளிட்ட இடங்களில் சாலைகளில் கால்நடைகள் சுற்றித்திரிகின்றன.

போக்குவரத்துக்கு இடையூறு

இதேபோல பல்வேறு பகுதிகளில் நாய்களும் அதிக அளவில் சுற்றித்திரிகின்றன. சில நேரங்களில் சாலைகளில் போக்குவரத்துக்கு இடையூறாகவும் படுத்துக்கொள்கின்றன. நாய்கள் வாகனங்களில் செல்வோரை விடாமல் துரத்தும் நிலையும் காணப்படுகின்றன.

தஞ்சையை அடுத்த பள்ளியக்ரகாரம் பகுதியில் குதிரைகள் அதிக அளவில் சாலைகளில் சுற்றித்திரிகின்றன. சில நேரங்களில் ஒன்றையொன்று விரட்டியபடி செல்வதால் சாலைகளில் செல்லும் பொதுமக்கள் அச்சத்துடனேயே சென்று வருகின்றன. இதனால் குழந்தைகள் தெருவில் நடமாட முடியாத நிலை காணப்படுகிறது.

வாகன ஓட்டிகளை தாக்குகின்றன

அவ்வாறு செல்லும் போது சாலைகளில் செல்லும் வாகன ஓட்டிகளையும் தாக்கி கீழே தள்ளி விட்டுவிட்டு செல்கி்ன்றன. இதனால் சிறு, சிறு விபத்துகளும் ஏற்படுகின்றன. இது போன்ற சம்பவங்கள் அடிக்கடி நிகழ்வதை காண முடிகிறது.

எனவே கால்நடைகளை உரிய முறையில் வீடுகளில் வைத்து வளர்க்காமல், சாலைகளில் அவிழ்த்து விடப்பட்டுள்ள கால்நடைகளை பிடித்து பட்டியில் அடைப்பதோடு, அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Related Tags :
Next Story