தெருக்களில் சுற்றித்திரியும் நாய்களால் பொதுமக்கள் அச்சம்


தெருக்களில் சுற்றித்திரியும் நாய்களால் பொதுமக்கள் அச்சம்
x

தெருக்களில் சுற்றித்திரியும் நாய்களால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

திருச்சி

திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்டு 65 வார்டுகள் உள்ளன. தற்போது அனைத்து வார்டுகளிலும் உள்ள முக்கிய பிரச்சினையாக நாய்கள் தொல்லை விஸ்வரூபம் எடுத்து வருகிறது. நாளுக்கு நாள் பெருகி வரும் நாய்களால் பொதுமக்கள் தெருக்களில் நடந்து செல்லவே அச்சப்படும் நிலை ஏற்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற மாநகராட்சி கவுன்சில் கூட்டத்தில் கூட நாய்கள் தொல்லைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கவுன்சிலர்கள் கோரிக்கை வைத்தனர். ஒரே தெருவில் 10-க்கும் மேற்பட்ட நாய்கள் சுற்றித்திரிவதால் வீட்டை விட்டு வெளியே குழந்தைகள் விளையாட வரும்போது, பெற்றோர் ஒருவித அச்சத்துடனேயே இருக்கிறார்கள். குறிப்பாக இரவு நேரங்களில் பணி முடிந்து வீட்டுக்கு செல்வோரும், அதிகாலை நேரங்களில் வேலைக்கு செல்பவர்களும் பயந்து, பயந்து ஒருவித தயக்கத்துடனேயே சென்று வருகிறார்கள். இதில் ஒரு சில நாய்கள் நோய்வாய்ப்பட்ட நிலையிலும், வெறிப்பிடித்த நிலையிலும் சுற்றித்திரிகின்றன.

ஆகவே அசம்பாவித சம்பவம் ஏதும் நடைபெறுவதற்கு முன்பு இந்த விவகாரத்தில் சிறப்பு கவனம் செலுத்தி நாய்களை பிடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


Next Story