ஓய்வூதியர் சங்க கூட்டம்


ஓய்வூதியர் சங்க கூட்டம்
x
தினத்தந்தி 8 Jan 2023 12:15 AM IST (Updated: 8 Jan 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

சாத்தான்குளத்தில் ஓய்வூதியர் சங்க கூட்டம் நடந்தது.

தூத்துக்குடி

தட்டார்மடம்:

தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்க வட்ட செயற்குழு கூட்டம் சாத்தான்குளம் அரசு ஊழியர் சங்க கட்டிட வளாகத்தில் நடந்தது. வட்டத் தலைவர் தேவ சமாதானம் தலைமை தாங்கினார். செயலாளர் முருகானந்தம் வரவேற்றார். பொருளாளர் ரூபவதி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்தார். இணைச் செயலாளர் கிறிஸ்டோபர் தீர்மானங்களை முன்மொழிந்தார். மாவட்ட இணைச்செயலாளர் ஜெயபால், துணைத் தலைவர் அல்போன்ஸ் லிகோரி ஆகியோர் பேசினர்.

முன்னாள் அரசு ஊழியர் சங்க வட்ட தலைவர் பாலகிருஷ்ணன், ஓய்வு பெற்ற தாசில்தார் நடராசன், ஓய்வுபெற்ற ஒன்றிய ஆணையாளர் இஸ்ரவேல், நல்லக்கண், அல்போன்சா, நாராயணன், சுவாமிநாதன், பார்வதி, எபநேசர், நவஜோதி, இசக்கி, தேவேந்திரன், புஷ்பவல்லி, பார்வதி, ஜோசப் துரைராஜ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். ஓய்வு பெற்ற அங்கன்வாடி, சத்துணவு ஊழியர்கள், கிராம உதவியாளர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.7,850 வழங்க வேண்டும். அகவிலைப்படி உயர்வினை மத்திய அரசு அறிவிக்கும் நாளில் இருந்தே வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. துணைத் தலைவர் பாண்டியன் நன்றி கூறினார்.


Next Story