பென்னிகுயிக் பிறந்தநாள் விழா


பென்னிகுயிக் பிறந்தநாள் விழா
x
தினத்தந்தி 17 Jan 2023 12:30 AM IST (Updated: 17 Jan 2023 12:31 AM IST)
t-max-icont-min-icon

தேனி மாவட்டம் லோயர்கேம்பில் நடந்த பென்னிகுயிக் பிறந்தநாள் விழாவில் அமைச்சர் இ.பெரியசாமி கலந்துகொண்டார்.

தேனி

முல்லைப்பெரியாறு அணை கட்டிய கர்னல் ஜான் பென்னிகுயிக் 182-வது பிறந்தநாள் விழா கூடலூர் லோயர்கேம்ப்பில் உள்ள அவரது நினைவு மணி மண்டபத்தில் நேற்று முன்தினம் நடந்தது. விழாவில் தமிழக அரசு. சார்பில் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் இ.பெரியசாமி பென்னிகுயிக்கின் உருவ சிலை, மற்றும் உருவபடத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் முரளிதரன், எம்.எல்.ஏ.க்கள் கம்பம் ராமகிருஷ்ணன், ஆண்டிப்பட்டி மகராஜன், பெரியகுளம் சரவணக்குமார், கூடலூர் நகராட்சி தலைவர் பத்மாவதி லோகந்துரை உள்பட பலர் கலந்துகொண்டனர். இதேபோல் எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் பென்னிகுயிக் சிலைக்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினர். அ.தி.மு.க. எடப்பாடி அணி சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ. ஜக்கையன், முல்லைப்பெரியாறு- வைகை பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்புக்குழு தலைவர் வக்கீல் முத்துராமலிங்கம், 5 மாவட்ட விவசாயிகள் சங்க தலைவர் எஸ்.ஆர்.தேவர், பா.ஜ.க., பார்வர்டு பிளாக், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, நாம் தமிழர் கட்சிகள், தேவாரம் அரிமா சங்கம், தேனி மாவட்ட முல்லைச்சாரல் விவசாயிகள் சங்கம், விவசாயிகள் விடுதலை முன்னணி, விவசாயிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர். விழாவில் பொதுமக்கள் பொங்கல் வைத்து, அவரது உருவ சிலைக்கு மலர் தூவி மாலை அணிவித்தும் மரியாதை செலுத்தினர்.


Next Story