நிலுவையில் உள்ள பணிகளை 10 நாட்களுக்குள் முடிக்க வேண்டும்


நிலுவையில் உள்ள பணிகளை 10 நாட்களுக்குள் முடிக்க வேண்டும்
x

பேரணாம்பட்டு ஒன்றியத்தில் நிலுவையில் உள்ள பணிகளை 10 நாட்களுக்குள் முடிக்க கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

வேலூர்

பேரணாம்பட்டு ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெறும் வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் செர்ல பல்லி கிராமத்தில் உள்ள வேளாண்மை விரிவாக்க மையத்தில் நடந்தது. கூட்டத்திற்கு வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தலைமை தாங்கி பேசினார். அப்போது நிலுவையிலுள்ள பணிகளை 10 நாட்களுக்குள் துரிதமாக முடிக்க உத்தரவிட்டார். அங்கன்வாடி மையம் கட்டும் பணியை விரைந்து தொடங்க உத்தரவிட்டார்.

ஆய்வு கூட்டத்தில் பேரணாம்பட்டு ஒன்றிய ஆணையாளர்கள் ஹேமலதா, எழிலரசி, துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் லட்சுமி, சுபானந்தராஜ், ரமேஷ், மீனா, தமிழரசன், ஒன்றிய பொறியாளர் பிரமிளா, பணி மேற்பார்வையாளர்கள் சலீம் பாஷா, உமா மகேஸ்வரி, ஹேமாவதி, கணேஷ்பாபு மற்றும் ஊராட்சி செயலாளர்கள் கலந்து கொண்டனர்.


Next Story