வழிகாட்டு நெறிமுறைகளை மீறும்கழிவுநீர் அகற்றும் வாகன உரிமையாளர்களுக்கு அபராதம்மாநகராட்சி ஆணையாளர் எச்சரிக்கை


வழிகாட்டு நெறிமுறைகளை மீறும்கழிவுநீர் அகற்றும் வாகன உரிமையாளர்களுக்கு அபராதம்மாநகராட்சி ஆணையாளர் எச்சரிக்கை
x
சேலம்

சேலம்

சேலம் மாநகராட்சி பகுதியில் வழிகாட்டு நெறிமுறைகளை மீறும் கழிவுநீர் அகற்றும் வாகன உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று மாநகராட்சி ஆணையாளர் பாலசந்தர் விடுத்துள்ளார்.

கலந்தாய்வு கூட்டம்

சேலம் மாநகராட்சி பகுதிகளில் கழிவுநீர் சேகரிப்பு தொட்டியில் இருந்து கழிவுநீரை எந்திரங்களை கொண்டு பாதுகாப்பான முறையில் சுத்தம் செய்யும் பணிகளை மேற்கொள்வது குறித்த கலந்தாய்வு கூட்டம் மாநகராட்சி அலுவலகத்தில் நடந்தது. ஆணையாளர் பாலசந்தர் தலைமையில் நடந்த கூட்டத்தில் தமிழ்நாடு மனித கழிவுகளை அகற்றும் தொழில் புரிவோர் தடுப்பு மற்றும் அவர்களது மறுவாழ்வு விதிகள் மற்றும் தமிழ்நாடு கழிவுநீர் மேலாண்மை ஒழுங்குமுறை மற்றும் செயல்பாடு வழிகாட்டு நெறிமுறைகள் தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

கூட்டத்தில் ஆணையாளர் பாலச்சந்தர் பேசியதாவது:-

கழிவுநீர் தொட்டியில் இறங்கி சுத்தம் செய்ய எந்தவொரு சூழ்நிலையிலும் தனிநபரை நேரடியாகவே அல்லது மறைமுகமாகவோ ஈடுபடுத்துவது முற்றிலுமாக தடை செய்யப்பட்டுள்ளது. இதனை பின்பற்ற தவறும் தனியார், ஒப்பந்ததாரர், வாகன உரிமையாளர்களில் முதன்முறையாக வழிகாட்டு நெறிமுறைகளை மீறுவோருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.2 லட்சம் அபராதம் அல்லது இரண்டும் தண்டனையாக விதிக்கப்படும். இரண்டாவது முறையாக மீறுபவர்களுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.5 லட்சம் அபராதம் அல்லது இரண்டும் சேர்ந்து விதிக்கப்படும்.

தலைக்கவசம்

தேவையான அனைத்து பாதுகாப்பு உபகரணங்களும். சாதனங்களும் வாகனத்தில் தயார் நிலையில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். கழிவுநீர் அகற்றும் பணியாளர்கள் பிரதிபலிப்பு ஆடை (ஏப்ரான்), கம்பூட்ஸ், பாதுகாப்பு கையுறை, தலைக்கவசம், முகக்கவசம், கண்ணாடிகள் போன்ற பாதுகாப்பு உபகரணங்கள் அணிவதை வாகன உரிமையாளர் மற்றும் வீட்டின் உரிமையாளர்கள் உறுதி செய்ய வேண்டும். கழிவுநீர் தொட்டியில் கழிவுநீர் அகற்றும் சேவைகளுக்கு உரிமம் பெற்ற ஊர்திகளை மட்டுமே மக்கள் பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த கூட்டத்தில் துணை ஆணையாளர் அசோக்குமார், மாநகர நல அலுவலர் யோகானந் மற்றும் அனைத்து சுகாதார அலுவலர்கள், சுகாதார ஆய்வாளர்கள், கழிவுநீர் அகற்றும் வாகன உரிமையாளர் மற்றும் டிரைவர்கள் கலந்து கொண்டனர்.


Next Story