சொத்து வரி செலுத்தாதவர்களுக்கு அபராதம்
பழனியில் சொத்து வரி செலுத்தாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று நகராட்சி அறிவித்தது.
திண்டுக்கல்
பழனி நகர் பகுதியில் உள்ள வீடு, வணிக நிறுவனங்களுக்கு நகராட்சி சார்பில் சொத்துவரி வசூல் செய்யப்பட்டு வருகிறது. இநத்நிலையில் பழனி நகராட்சி சார்பில் அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டு உள்ளது. அதில், "நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு விதியின்படி இந்த நிதிஆண்டின் (2023-2024) முதல் அரையாண்டு சொத்துவரியை வருகிற 30-ந்தேதிக்குள் கட்ட வேண்டும். அவ்வாறு செலுத்தாதவர்களுக்கு அடுத்த மாதம் 1-ந்தேதி முதல் 1 சதவீத அபராத தொகையுடன் வசூல் செய்யப்படும். அதேபோல் இந்த நிதியாண்டின் 2-ம் அரையாண்டுக்கான சொத்துவரியை அடுத்த மாதத்துக்குள் (அக்டோபர்) செலுத்தினால் சொத்துவரியில் 5 சதவீதம் தள்ளுபடி செய்து ஊக்கத்தொகை வழங்கப்படும்" என்று கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story