கொடைக்கானலில் குடியிருப்புக்குள் உலா வரும் மயில்கள்


கொடைக்கானலில் குடியிருப்புக்குள் உலா வரும் மயில்கள்
x

கொடைக்கானலில் குடியிருப்புக்குள் மயில்கள் உலா வருகின்றன.

திண்டுக்கல்

கொடைக்கானல் மலைப்பகுதியில் ஏராளமான வன விலங்குகள் உள்ளன. அதேபோல் பல்வேறு வகையான பறவைகளும் சுற்றித்திரிகின்றன. இந்தநிலையில் கடந்த சில தினங்களாக மயில்கள் கூட்டம், கூட்டமாக நகர் பகுதிக்குள் அடிக்கடி உலா வருகின்றன.

குறிப்பாக நாயுடுபுரத்தில் குடியிருப்பு பகுதிகளில் தினசரி மயில்கள் வந்த வண்ணம் உள்ளன. கொடைக்கானலில் நிலவும் சீதோஷ்ண சூழலுக்கு ஏற்ப ஆண் மயில்கள் தோகை விரித்து ஆடுகின்றன. இதனால் பொதுமக்கள் மயில்களை பார்த்து ரசிப்பதுடன், அவற்றுக்கு உணவு வைத்து வருகின்றனர்.

இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, கொடைக்கானலில் தற்போது பிளம்ஸ் மற்றும் பேரிக்காய் சீசன் ஆகும். இதனால் அவற்றை உண்பதற்காக நகர் பகுதிக்குள் மயில்கள் படையெடுத்து இருக்கலாம் என்றனர்.



Related Tags :
Next Story