அமைதியாக நடந்த விநாயகர் சிலை ஊர்வலம்: போலீசாருக்கு டி.ஜி.பி. சைலேந்திரபாபு பாராட்டு


அமைதியாக நடந்த விநாயகர் சிலை ஊர்வலம்: போலீசாருக்கு டி.ஜி.பி. சைலேந்திரபாபு பாராட்டு
x

தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களுக்கு முன்பு விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு நீர் நிலைகளில் கரைக்கப்பட்டன.

சென்னை,

தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களுக்கு முன்பு விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு நீர் நிலைகளில் கரைக்கப்பட்டன. இறுதியில் நடைபெற்ற விநாயகர் சிலை ஊர்வல பாதுகாப்பு பணியில் 75 ஆயிரத்து 812 போலீஸ் அதிகாரிகளும், போலீசாரும் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

எப்போதும் இல்லாத வகையில் சிறு அசம்பாவிதம் கூட இல்லாமல் மிகவும் அமைதியாக விநாயகர் சிலை ஊர்வலம் நடத்தி முடிக்கப்பட்டதாக கூறி பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீஸ் அதிகாரிகள், போலீசார், ஊர்க்காவல் படையினருக்கு தமிழக போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு பாராட்டு தெரிவித்துள்ளார்.

அந்த பாராட்டு செய்தியில், 'பாதுகாப்பு பணியில் தமிழக காவல்துறையினர் காட்டிய மன தைரியம், கடமை உணர்வு, தன்னடக்கம், பொறுமை போன்றவை எதிர்கால சந்ததியினர் கடைபிடிக்கும் வகையில் சிறப்பாக அமைந்தது. சிலைகளை நிறுவுவது, பாதுகாப்பது, கரைக்கும் இடங்களில் மக்கள் கூட்டத்தை சிறப்பாக கையாண்டது பற்றிய பாதுகாப்பு குறிப்புகள் பிற்கால பயன்பாட்டிற்காக போலீஸ் நிலையங்களில் பாதுகாப்பாக பராமரிக்கப்பட வேண்டும்' என கூறப்பட்டுள்ளது.


Next Story