பணம் கொடுக்கல்-வாங்கல் தகராறு:பெண்ணை கொல்ல முயன்ற 2 பேருக்கு 7 ஆண்டு சிறை:உத்தமபாளையம் கோர்ட்டு தீர்ப்பு


பணம் கொடுக்கல்-வாங்கல் தகராறு:பெண்ணை கொல்ல முயன்ற 2 பேருக்கு 7 ஆண்டு சிறை:உத்தமபாளையம் கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 9 July 2023 12:15 AM IST (Updated: 9 July 2023 5:34 PM IST)
t-max-icont-min-icon

கம்பம் அருகே பணம் கொடுக்கல், வாங்கல் தகராறில் பெண்ணை கொல்ல முயன்ற வழக்கில் 2 பேருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தமபாளையம் கோர்ட்டு உத்தரவிட்டது.

தேனி

கொடுக்கல்-வாங்கல்

கம்பம் அருகே உள்ள காமயகவுண்டன்பட்டியை சேர்ந்தவர் விஜயபிரபா (வயது 44). இவர், கணவரை பிரிந்து அவரது தந்தை வீட்டில் இருந்து தையல் தொழில் செய்து வருகிறார். கம்பத்தை சேர்ந்தவர் பாலமுருகன். இவர்கள் இருவருக்கும் இடையே பணம் கொடுக்கல்-வாங்கல் இருந்்து வந்தது. இதுதொடர்பாக விஜயபிரபா, பாலமுருகன் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இந்த நிலையில் கம்பத்தை சேர்ந்த கண்ணன் என்பவர் விஜயபிரபா வீட்டுக்குள் நுழைந்து பாலமுருகன் தங்களிடம் பணம் வாங்கி வர சொன்னதாக கூறியதாக தெரிகிறது. இதில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தகராறாக மாறியது. அப்போது பணம் தரவில்லை என்றால் உங்களை கொன்றுவிடு என்று பாலமுருகன் கூறியதாக, விஜயபிரபாவை அவர் மிரட்டினார்.

7 ஆண்டு சிறை

மேலும் ஆத்திரமடைந்த கண்ணண் தையல் எந்திரம் மேல் இருந்த கத்தரிக்கோலை எடுத்து விஜய பிரபா கழுத்து, கை உள்ளிட்ட இடங்களில் குத்தி கொல்ல முயன்றார். இதில் விஜய பிரபா படுகாயமடைந்தார். இதுகுறித்து ராயப்பன்பட்டி போலீசார் வழக்குப்பதிந்து பாலமுருகன், கண்ணன் ஆகியோரை கைது செய்தனர். இந்த வழக்கு உத்தமபாளையம் சார்பு கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கின் இறுதி விசாரணை நேற்று முன்தினம் நடந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி மாரியப்பன் குற்றம் சாட்டப்பட்ட பாலமுருகன், கண்ணன் ஆகிய 2 பேருக்கும் 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை, ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார். அபராத தொகையை செலுத்த தவறினால் மேலும் 6 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று தீர்ப்பு வழங்கி உத்தரவிட்டார். இதையடுத்து பாலமுருகன், கண்ணன் ஆகியோரை மருத்துவ பரிசோதனைக்கு பிறகு மதுரை மத்திய சிறைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.


Next Story