தொண்டி கடல் பகுதியில் ரோந்து பணி
தொண்டி கடல் பகுதியில் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் ரோந்து பணி நடைபெற்றது.
தொண்டி,
இந்திய கப்பல் படை, கடலோர பாதுகாப்பு படை மற்றும் தமிழக கடலோர பாதுகாப்பு குழுமம் ஆகியவை இணைந்து கடந்த 2 நாட்களாக போர் எச்சரிக்கை விழிப்புணர்வு கண்காணிப்பு ரோந்து பணி நாடு முழுவதும் நடத்தப்பட்டது. அதன் அடிப்படையில் தொண்டி கடற்கரைப் பகுதியில் கடலோர பாதுகாப்பு குழும போலீஸ் இன்ஸ்பெக்டர் கனகராஜ், இன்ஸ்பெக்டர் அய்யனார், தனி பிரிவு போலீஸ் ஏட்டு இளையராஜா மற்றும் போலீசார் படகுகளில் கடலுக்குள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். கடலில் வித்தியாசமான கப்பல், ஹெலிகாப்டர்கள் தென்படுகிறதா? என்பதையும் நமது நாட்டின் பாதுகாப்பு குறித்தும் இந்திய கடல் பகுதியில் அந்நிய நாட்டுக் கப்பல்கள் ஊடுருவல் போன்ற தகவல் எவ்வாறு நமக்கு கிடைக்கிறது என்பது குறித்த முன்னெச்சரிக்கை விழிப்புணர்வு தொடர்பாக இந்த ஒத்திகை நடத்தப்பட்டது. என்றும் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் தெரிவித்தனர்.