மேற்கூரை இல்லாத பயணிகள் நிழலகம்


மேற்கூரை இல்லாத பயணிகள் நிழலகம்
x

கூத்தாநல்லூர் அருகே பாலக்குறிச்சியில் உள்ள பயணிகள் நிழலகத்தில் மேற்கூரை இல்லாததால் கிராம மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள்.

திருவாரூர்

கூத்தாநல்லூர்:-

கூத்தாநல்லூர் அருகே பாலக்குறிச்சியில் உள்ள பயணிகள் நிழலகத்தில் மேற்கூரை இல்லாததால் கிராம மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள்.

பயணிகள் நிழலகம்

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அருகே வடபாதிமங்கலம்- சேந்தங்குடி சாலையில் பாலக்குறிச்சி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தையொட்டி அப்பகுதி மக்களின் பயன்பாட்டுக்காக பயணிகள் நிழலகம் கட்டப்பட்டுள்ளது.

கூத்தாநல்லூர், வடபாதிமங்கலம், திருவாரூர், சேந்தங்குடி, மன்னார்குடி உள்ளிட்ட ஊர்களுக்கு செல்வதற்காக கிராம மக்கள் இந்த பயணிகள் நிழலகத்தை பயன்படுத்தி வருகிறார்கள்.

மேற்கூரை இல்லை

இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக பாலக்குறிச்சியில் உள்ள பயணிகள் நிழலகம் சேதம் அடைந்து காணப்படுகிறது. நிழலகத்தில் மேற்கூரையும் இல்லாததால் கிராம மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். வெயில் சுட்டெரிக்கும் நிலையில் இந்த பயணிகள் நிழலகத்தில் பஸ்சுக்கு காத்திருப்பது சிரமமாக உள்ளதாக கிராம மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். மேலும் நிழலகத்தில் இருக்கைகளும் இல்லை. இதனால் முதியவர்கள், பெண்கள் தினசரி அவதிப்பட்டு வருகின்றனர்.

எனவே இந்த பயணிகள் நிழலகத்தை உடனடியாக புனரமைப்பு செய்ய வேண்டும் அல்லது மேற்கூரையுடன் புதிய பயணிகள் நிழலகத்தை கட்டித்தர வேண்டும் என கிராம மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.


Next Story