இருக்கை வசதி இல்லாததால் பயணிகள் அவதி


இருக்கை வசதி இல்லாததால் பயணிகள் அவதி
x

இருக்கை வசதி இல்லாததால் பயணிகள் அவதிப்படுகின்றனர்.

விருதுநகர்


சாத்தூரில் நகரின் வளர்ச்சிக்கேற்ப பஸ் நிலையம் விசாலமாக இல்லாததால் வரும் பயணிகள் மிகுந்த சிரமப்படும் சூழ்நிலை உள்ளது. இந்த பஸ் நிலையத்தில் பயணிகள் அமர்வதற்கு இருக்கைகள் இல்லை. ஏற்கனவே கடைகளின் முன்பாக போடப்பட்டிருந்த மேற்கூரை பெயர்ந்து விழுந்து பல வருடங்களாகியும் சரி செய்யப்படாமல் உள்ளது. நிழற்குடை வசதி இல்லாததால் பொதுமக்கள் வெயிலில் நிற்க வேண்டிய நிலை உள்ளது. குடிதண்ணீர் வசதியும் இல்லை. லேசான மழை பெய்தால் கூட பஸ்நிலையத்தில் தண்ணீா் தேங்கும் நிலை உள்ளது. பஸ் நிலைய வளாகத்தில் இலவச சுகாதார வளாகம் அமைக்கப்பட்டும் கட்டணம் வசூலிக்கப்படுகின்றது. இதனால் அப்பகுதியில் உள்ள மக்கள் மட்டுமின்றி சுற்றுலா பயணிகளும் பெரும் இன்னலுக்கு ஆளாகின்றனர். எனவே பஸ் நிலையத்திற்கு வரும் பயணிகளின் சிரமத்தை கருத்தில் கொண்டு பஸ் நிலையத்தை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் துரிதமாக மேற்கொள்ள வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story