பஸ் மீது பீர்பாட்டில் வீசியதில் பயணி படுகாயம்; 4 சிறுவர்கள் கைது


பஸ் மீது பீர்பாட்டில் வீசியதில் பயணி படுகாயம்; 4 சிறுவர்கள் கைது
x

கள்ளக்குறிச்சியில் பஸ் மீது பீர்பாட்டில் வீசியதால் பயணி படுகாயம் அடைந்தார். இதுதொடர்பாக 4 சிறுவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி பஸ் நிலையத்தில் இருந்து சென்னை நோக்கி நேற்று முன்தினம் அதிகாலை 2.30 மணிக்கு அரசு பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. துருகம் சாலையில் சென்ற போது, அங்கு நின்ற கள்ளக்குறிச்சியை சேர்ந்த 17 வயதுடைய சிறுவர்கள் 4 பேர், பஸ்சை நிறுத்துமாறு கைகாட்டியுள்ளனர். ஆனால் பஸ் நிற்காமல் சென்றது.

இதில் ஆத்திரமடைந்த சிறுவர்கள், டிரைவர் மற்றும் கண்டக்டரை ஆபாசமாக திட்டி தாங்கள் வைத்திருந்த பீர் பாட்டிலை பஸ் மீது வீசியுள்ளனர். இதில் பீர் பாட்டில் உடைந்து சிதறியதில் பஸ்சில் பயணம் செய்த கோயம்புத்தூர் மாவட்டம் செல்வபுரம் கிராமத்தை சேர்ந்த செல்வராஜ் மகன் சீனிவாசன் (வயது 38) என்பவரின் கண்ணில் காயம் ஏற்பட்டது. இதுகுறித்து சீனிவாசன் கள்ளக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து 4 சிறுவர்களையும் கைது செய்தனர்.


Next Story