சிறுபாக்கம் புதிய பஸ் நிலையத்தில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் பயணிகள் எதிர்பார்ப்பு


சிறுபாக்கம்  புதிய பஸ் நிலையத்தில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும்  பயணிகள் எதிர்பார்ப்பு
x

சிறுபாக்கம் புதிய பஸ் நிலையத்தில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்று பயணிகள் கோாிக்கை விடுத்துள்ளனா்.

கடலூர்


சிறுபாக்கம்,

சிறுபாக்கம் ஊராட்சியில் கடந்த 2013-ம் ஆண்டில் ஒருங்கிணைந்த ஒப்படைப்பு வருவாய்த் திட்டத்தின் கீழ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில், 1.40 கோடி ரூபாய் மதிப்பில் புதிய பஸ் நிலையம் கட்டப்பட்டது.

பஸ் நிலையத்தில் உள்ள வணிக வளாகத்தில் உள்ள கடைகள் மங்களூர் ஒன்றிய நிர்வாகம் மூலம், ஏலம் விடப்பட்டு, வருமானம் ஈட்டி வருகின்றனர். இந்நிலையில், பஸ் நிலையத்திற்கு வரும் பயணிகளின் அடிப்படை வசதிகள் என்பது போதுமானதாக இல்லாமல் இருந்து வருகிறது.

குறிப்பாக பயணிகள் அமரும் இருக்கைகள் சேதமடைந் துள்ளன. மேலும், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் எந்திரம், கழிவறைகள் பராமரிப்பின்றி உள்ளன. இதனால், பஸ் நிலையத்திற்கு வரும் பயணிகள், பஸ் டிரைவர்கள், கண்டக்டர்கள் கடும் சிரமத்திற்குள்ளாகின்றனர். எனவே, சிறுபாக்கம் பஸ் நிலையத்தில் அடிப்படை வசதிகளை சீரமைக்க ஒன்றிய நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story