பா.ஜனதா பட்டியல் அணியினர் நூதன போராட்டம்


பா.ஜனதா பட்டியல் அணியினர் நூதன போராட்டம்
x

பா.ஜனதா பட்டியல் அணியினர் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அரியலூர்

பாரதிய ஜனதா கட்சி மாவட்ட பட்டியல் அணி சார்பில், தமிழகத்தில் உள்ள பட்டியல் இன சமூக மக்களின் முன்னேற்றத்திற்காக பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான மத்திய அரசு ஒதுக்கிய நிதியை பயன்படுத்தாமல் திருப்பி அனுப்பிய தி.மு.க. அரசை கண்டித்தும், உண்டியல் மூலம் யாசகமாக கிடைக்கும் நிதியை வசூலித்து தமிழக அரசிற்கு அளிக்கும் நூதன போராட்டம் அரியலூர் அண்ணா சிலை அருகே நேற்று நடந்தது. இந்த நூதன போராட்டத்திற்கு பா.ஜனதா பட்டியல் அணி தலைவர் குப்புசாமி தலைமை தாங்கினார். இதில், சிறப்பு அழைப்பாளர்களாக மாநில பட்டியல் அணி செயலாளர் பிச்சைமுத்து, மாவட்ட பா.ஜனதா தலைவர் அய்யப்பன் ஆகியோர் கலந்து கொண்டு தமிழக அரசை கண்டித்து பல்வேறு கோஷங்களை எழுப்பினர்.


Next Story