சிறுவர் பூங்காவை பயன்பாட்டுக்கு கொண்டுவர நகராட்சி நடவடிக்கை


சிறுவர் பூங்காவை பயன்பாட்டுக்கு கொண்டுவர நகராட்சி நடவடிக்கை
x

சிறுவர் பூங்காவை பயன்பாட்டுக்கு கொண்டுவர நகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது.

ராமநாதபுரம்

ராமேசுவரம்,

ராமேசுவரம் காட்டு பிள்ளையார் கோவில் அருகே ஸ்ரீராம் நகர் செல்லும் பகுதியில் மத்திய அரசின் அம்ருத் திட்டத்தின் கீழ் கடந்த 2016-ம் ஆண்டு ரூ.45 லட்சம் நிதியில் சிறுவர் பூங்காகட்டும் பணி தொடங்கி நடைபெற்று வந்தது. பல விளையாட்டு சாதனங்களும் அமைக்கப்பட்டன. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் நடந்து செல்ல வசதியாக அலங்கார கற்களும் இந்த பூங்காவை சுற்றி அமைக்கப்பட்டு இருந்தன. சிறுவர் பூங்கா பணிகள் முடிந்து 5 ஆண்டுகள் பூங்கா திறக்கப்படாமல் புதர் மண்டியது. இதுகுறித்து 'தினத்தந்தி'யில் படத்துடன் சுட்டிக் காட்டப்பட்டது. இதன் எதிரொலியாக ராமேசுவரம் நகர சபை தலைவர் நாசர் கான் உத்தரவின் பேரில் நகராட்சி ஆணையாளர் மூர்த்தி ஆலோசனையில் ஸ்ரீராம் நகர் செல்லும் பகுதியில் உள்ள நகராட்சி சிறுவர் பூங்காவில் உள்ள செடிகளை அகற்றி சுத்தம் செய்யும் பணி தொடங்கியது. இது குறித்து ராமேசுவரம் நகர சபை தலைவர் நாசர் கான் கூறியதாவது:- அனைத்து பணிகளையும் முடித்து இன்னும் ஒரு வாரத்தில் பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் பயன்பாட்டிற்கு இந்த பூங்கா கொண்டு வரப்படும் என்று தெரிவித்தார்.


Next Story