மகன் வாங்கிய கடனை கட்ட முடியாததால் விஷம் குடித்த பெற்றோர்: தாய் சாவு-தந்தைக்கு சிகிச்சை


மகன் வாங்கிய கடனை கட்ட முடியாததால் விஷம் குடித்த பெற்றோர்: தாய் சாவு-தந்தைக்கு சிகிச்சை
x

தளவாபாளையம் அருகே மகன் வாங்கிய கடனை கட்ட முடியாததால் பெற்றோர் விஷம் குடித்தனர். இதில் தந்தை பரிதாபமாக இறந்தார். தாய்க்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கரூர்

தொழிலில் நஷ்டம்

கரூர் மாவட்டம், தளவாபாளையம் அருகே உள்ள அய்யம்பாளையத்தை சேர்ந்தவர் ரங்கசாமி (வயது 62). இவரது மனைவி பாப்பாத்தி (58). இந்த தம்பதியின் மகன் மோகன்ராஜ் (வயது 32). இவர் அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். மேலும் ஷேர் மார்க்கெட்டில் பணத்தை முதலீடு செய்து வந்துள்ளார். இதில் ஷேர் மார்க்கெட்டில் ேமாகன்ராஜூக்கு நஷ்டம் ஏற்பட்டதால் வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியவில்லை. அதேபோல் வங்கியில் வாங்கிய கடனையும் கட்ட முடியவில்லை.

புதுவீடு கட்டியதற்கு வாங்கிய கடனையும் கட்ட முடியாததால் புதுவீட்டை விற்பனை செய்து விட்டார். அதனால் மோகன்ராஜ் அய்யம்பாளையத்தில் தனது தாய், தந்தையுடன் வாடகை வீட்டில் குடியிருந்து வந்தார். தற்போது நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூரில் உள்ள தனது மாமியார் வீட்டில் மனைவியுடன் தங்கி குடும்பம் நடத்தி வருகிறார்.

விஷம் குடித்த பெற்றோர்

இந்நிலையில் மோகன்ராஜ் நேற்று முன்தினம் இரவு அய்யம்பாளையம் வந்து தனது தாய், தந்தையை பார்த்து விட்டு பரமத்தி வேலூருக்கு ெசன்று விட்டார். நேற்று காலை அய்யம்பாளையத்தை சேர்ந்த உறவினர்கள் மோகன்ராஜிக்கு போன் செய்து உனது பெற்றோர் நீ விற்பனை செய்த புதிய வீட்டின் வாசலில் மயங்கி கிடக்கின்றனர். மேலும், பூச்சிக்கொல்லி மருந்து (விஷம்) டப்பாவும் அருகில் கிடக்கிறது என்று கூறியுள்ளனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த மோகன்ராஜ் விரைந்து வந்து பார்த்தார். அப்போது தந்தை ரங்கசாமி இறந்து கிடந்தார். தாய் பாப்பாத்தி உயிருக்கு போராடி கொண்டிருந்தார். அப்போது அவர் தனது மகனிடம் நீ வாங்கிய அதிக கடனை உன்னால் கட்ட முடியாததால் உன்னை நினைத்து கஷ்டப்பட்டு பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து விட்டோம் என்று கூறியுள்ளார்.

தாய்க்கு சிகிச்சை

இதையடுத்து பாப்பாத்தியை மீட்டு சிகிச்சைக்காக கரூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த வேலாயுதம்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ரங்கசாமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலாயுதம்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வேலாயுதம்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story