பரமத்திவேலூர் சந்தையில் பூக்கள் விலை வீழ்ச்சி விவசாயிகள் கவலை


பரமத்திவேலூர் சந்தையில்  பூக்கள் விலை வீழ்ச்சி  விவசாயிகள் கவலை
x

பரமத்திவேலூர் சந்தையில் பூக்கள் விலை வீழ்ச்சி விவசாயிகள் கவலை

நாமக்கல்

பரமத்திவேலூர்:

பரமத்திவேலூர் மற்றும் கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் பல்வேறு வகையான பூக்கள் பயிர் செய்யப்பட்டுள்ளது. இங்கு விளையும் பூக்களை விவசாயிகள் பரமத்திவேலூரில் உள்ள பூக்கள் ஏல சந்தைகளுக்கு கொண்டு வருகின்றனர்.

வேலூர், ஜேடர்பாளையம், கபிலர்மலை, பரமத்தி, பாலப்பட்டி மற்றும் கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் பூக்களை ஏலம் எடுக்க வருகின்றனர். கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் குண்டுமல்லி ரூ.800-க்கும், சம்பங்கி கிலோ ரூ.150-க்கும், அரளி கிலோ ரூ.150-க்கும், ரோஜா கிலோ ரூ.240-க்கும், முல்லை பூ ரூ.750-க்கும், செவ்வந்திப்பூ ரூ.250-க்கும், கனகாம்பரம் ரூ.700-க்கும் ஏலம் போனது.

இந்த நிலையில் நேற்று நடைபெற்ற ஏல‌த்தில் குண்டுமல்லி கிலோ ரூ.400-க்கும், சம்பங்கி கிலோ ரூ.50-க்கும், அரளி கிலோ ரூ.80-க்கும், ரோஜா கிலோ ரூ.160-க்கும், முல்லை பூ கிலோ ரூ400-க்கும், செவ்வந்தி பூ ரூ.200-க்கும், கனகாம்பரம் ரூ.400-க்கும் ஏலம் போனது. பூக்கள் விலை வீழ்ச்சி அடைந்துள்ளதால் பூ விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.


Next Story