பாப்பாரப்பட்டி அருகே மாற்றுத்திறனாளியை தாக்கிய தொழிலாளிக்கு வலைவீச்சு


பாப்பாரப்பட்டி அருகே  மாற்றுத்திறனாளியை தாக்கிய தொழிலாளிக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 13 Nov 2022 12:15 AM IST (Updated: 13 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

பாப்பாரப்பட்டி அருகே மாற்றுத்திறனாளியை தாக்கிய தொழிலாளிக்கு வலைவீச்சு

தர்மபுரி

பாப்பாரப்பட்டி:

பாப்பாரப்பட்டி அருகே பிக்கிலி ஊராட்சிக்குட்பட்ட அம்மன் நகரை சேர்ந்தவர் வெங்கடாசலம் (வயது 40). மாற்றுத்திறனாளி. இவருடைய மகள் பிளஸ்-1 படித்து வருகிறார். இதே கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (49). செங்கல் சூளை தொழிலாளி. வெங்கடாசலம், கோவிந்தராஜ் ஆகியோர் உறவினர் ஆவர். இந்த நிலையில் கோவிந்தராஜ் தனது மைத்துனருக்கு 2-வது தாரமாக வெங்கடாசலத்தின் மகளை திருமணம் செய்து கொடுக்கும்படி கேட்டதாக கூறப்படுகிறது.

இதற்கு வெங்கடாசலத்தின் குடும்பத்தினர் சம்மதிக்கவில்லை என தெரிகிறது. இதனால் வெங்கடாசலத்தின் மீது கோவிந்தராஜ் கோபம் அடைந்தார். இதற்கிடையே சம்பவத்தன்று வெங்கடாசலத்தின் நிலத்தில் கோவிந்தராஜ் கல் நட்டாராம். அப்போது அங்கு வந்த வெங்கடாசலம் இதனை தட்டி கேட்டுள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த கோவிந்தராஜ் கம்பால் வெங்கடாசலத்தின் தலையில் தாக்கினார். இதில் பலத்த காயம் அடைந்த வெங்கடாசலம் தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். இதுகுறித்து அவர் பாப்பாரப்பட்டி போலீசில் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் கோவிந்தராஜ் மீது வழக்குப்பதிவு அவரை வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story