சித்து விளையாட்டுகளை செய்யக்கூடிய பன்னீர்செல்வத்தால் அம்மாவுக்கே ஆபத்து வந்தது - ஆர்.பி. உதயகுமார்


சித்து விளையாட்டுகளை செய்யக்கூடிய பன்னீர்செல்வத்தால் அம்மாவுக்கே ஆபத்து வந்தது - ஆர்.பி. உதயகுமார்
x

சித்து விளையாட்டுகளை செய்யக்கூடிய பன்னீர்செல்வத்தால் அம்மாவுக்கே ஆபத்து வந்தது என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார்.

மதுரை,

மதுரையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது,

அதிமுகவை 1972 ஆம் ஆண்டு புரட்சித்தலைவர் தொடங்கினார். புரட்சித்தலைவரும் தனது ஆயுள் காலம் முழுவதும் முதல்-அமைச்சராக இருந்தார். அதன் பின்பு 1991 ஆம் ஆண்டு புரட்சித்தலைவி அம்மா மீண்டும் புனித ஆட்சியை மலரை செய்தார். அப்போதெல்லாம் அம்மாவின் முதல்-அமைச்சர் பதவிக்கு எந்த ஆபத்தும் இல்லை.

2001ஆண்டில் புரட்சி தலைவி அம்மா முதல்-அமைச்சராக பொறுப்பேற்ற பொழுது, தென் தமிழ் நாட்டில் இருந்து ஒரு சுயநலத்தின் அடையாளமாக மௌன சிரிப்பிலே ஒரு மர்ம தேசத்தை உள்ளடக்கி, ஒரு புண்ணியவான் போல் வெளி தோற்றத்தை உருவாக்கிக் கொண்டு, அத்தனை சித்து விளையாட்டுகளை செய்யக்கூடிய பன்னீர்செல்வத்தால், 2001 ஆண்டில் அம்மா ஆட்சிப் பொறுப்பை ஏற்றதற்கு பிறகு முதல்-அமைச்சர் பதவிக்கு, அம்மாவிற்கே ஆபத்து வந்தது.

பன்னீர்செல்வம் சிரிப்பில் அத்தனை அசுர குணங்களை மனதில் வைத்துக்கொண்டு, வெளித்தோற்றத்தில் காட்டும் மாயத் தோற்றத்தை ஒரு நாள் மக்கள் அறியும் நாள் வெகு தொலைவில் இல்லை.

அதிமுகவை உங்கள் குடும்ப சொத்தாக நினைப்பதை ஒருபோதும் நான் இருக்கும் வரை நடக்காது. உங்கள் பணம் பாதாள வரை பாயட்டும், அதுக்கு நான் கவலைப்படவில்லை. பார்த்துவிடலாம் எத்தனை நாள் நடக்கிறது உங்கள் திருவிளையாடல், சித்து விளையாட்டு, எச்சரிக்கையாக சொல்கிறேன் இதுதான் உங்களுக்கு இறுதி அத்தியாயம் உங்கள் போலி வேஷம், நரித்தனம் எடுபடாது.

இந்த இயக்கத்துக்காக எடப்பாடியார் கடுமையாக போராடி வருகிறார். அன்று கூட நீங்கள் தனிமைப்பட்டு, அரசியல் அடையாள இல்லாமல், அனாதையாக இருந்த பொழுது, உங்களை அழைத்து கழகத்தின் தலைவராக்கி நாட்டின் துணை முதல்-அமைச்சராக அழகு பார்த்த எடப்பாடியார் உங்களால் எத்தனை எத்தனை சங்கடங்கள், சோதனைகள் என்பதை நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள், உங்களின் உண்மை முகம் தெரியும் நாள் வெகு தொலைவில் இல்லை.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story