பங்குனி உற்சவ திருவிழா: மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவிலில் அதிகார நந்தி தரிசனம்..!


பங்குனி உற்சவ திருவிழா: மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவிலில் அதிகார நந்தி தரிசனம்..!
x
தினத்தந்தி 30 March 2023 7:26 AM IST (Updated: 30 March 2023 7:36 AM IST)
t-max-icont-min-icon

மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவிலில் அதிகார நந்தி தரிசனம் நிகழ்ச்சி நடந்தது.

மயிலாப்பூர்,

மயிலாப்பூரில் உள்ள வெள்ளீசுவரர், கபாலீசுவரர், விருப்பாக்ஷீசுவரர், காரணீசுவரர், மல்லீசுவரர், வாலீசுவரர், தீர்த்தபாலீசுவரர் ஆகிய 7 சிவாலயங்கள் சிறப்பு வாய்ந்தவையாகும். எனவே இங்கு மாதம் தோறும் திருவிழாக்கள், சாமி ஊர்வலம் வருவது, மங்கல வாத்தியங்கள் கேட்டு கொண்டே இருக்கும்.

பல்வேறு சிறப்புகளை கொண்ட மயிலாப்பூர் கற்பகாம்பாள் உடனுறை கபாலீசுவரர் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி பெருவிழா வெகுவிமரிசையாக நடந்து வருகிறது. அந்தவகையில் நடப்பாண்டு பங்குனி திருவிழாவு கடந்த 28-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இந்த நிலையில், பங்குனி உற்சவ திருவிழாவின் 3-ம் நாளான இன்று மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் அதிகார நந்தி வாகனத்தில் உற்சவர் திருக்காட்சி நடந்தது. இதில் கபாலீசுவரர் பக்தர்கள் புடை சூழ உற்சாக நடனமாடி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விண்ணதிர நமச்சிவாய என்ற பக்தி முழக்கத்துடன் வீதியுலா நடந்தது.


வரும் 3-ந்தேதி (திங்கள்கிழமை) நடக்கும் தேரோட்டத்தையொட்டி காலை 7.25 மணிக்கு திருத்தேர் வடம் பிடிக்கப்படுகிறது. தொடர்ந்து 4-ந்தேதி பகல் 2.45 மணிக்கு வெள்ளி விமானத்தில் இறைவன் எழுந்தருள அறுபத்து மூன்று நாயன்மார்களோடு திருக்காட்சி நிகழ்ச்சி நடக்கிறது. 6-ந்தேதி இரவு 8 மணிக்கு திருக்கல்யாணம் மற்றும் கொடி இறக்கம் நிகழ்ச்சியும் நடக்கிறது. விழா நாட்களில் மாட வீதிகளில் சாமி வீதி உலா நிகழ்ச்சியும் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்து வருகின்றனர்.


Next Story