வைத்திலிங்க சுவாமி கோவிலில் பங்குனி தேரோட்டம்
ஆலங்குளம் ஆலடிப்பட்டி வைத்திலிங்க சுவாமி கோவிலில் பங்குனி தேரோட்டம் நடைபெற்றது.
தென்காசி
ஆலங்குளம்:
ஆலங்குளம் அருகேயுள்ள ஆலடிப்பட்டி ஸ்ரீவைத்தியலிங்க சுவாமி - அன்னை யோகாம்பிகை கோவிலில் பங்குனித் தேரோட்டம் நடைபெற்றது. முன்னதாக கடந்த 28-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நாள் தோறும் சுவாமி அம்பாளுக்கு, அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. 9- ஆம் நாள் இரவு திருவிளக்கு பூஜை நடந்தது. அன்று இரவு சுவாமி எழுந்தருளுதல் வைபவம் மற்றும் தேர்க்காட்சி நடைபெற்றது. தேரோட்டத்தன்று சுவாமி பெரிய தேரில் எழுந்தருளினார். திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர். அம்பாள் எழுந்தருளிய சிறிய தேரை பெண்கள் மட்டும் இழுத்து வலம் வந்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story