ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம்
பாபநாசத்தில் ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் நடந்தது
பாபநாசம்;
பாபநாசம் ஊராட்சி ஒன்றியக் குழு கூட்டம் தலைவர் சுமதி கண்ணதாசன் தலைமையில் நடைபெற்றது. ஆணையர் சிவகுமார், மாவட்ட கவுன்சிலர்கள் தாமரை செல்வன், பாத்திமா ஜான் ராயல் அலி, ஒன்றியக்குழு துணை தலைவர் தியாக.பழனிச்சாமி, ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில் ஒன்றிய கவுன்சிலர்கள் தங்கள் பகுதியில் நிறைவேற்றப்பட வேண்டிய கோரிக்கைகள் குறித்து பேசினார்கள். உறுப்பினர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என ஒன்றியக்குழு தலைவர் சுமதிகண்ணதாசன் கூறினாா்.கூட்டத்தில் , பாபநாசம் ஊராட்சி ஒன்றியத்தில் ஒன்றிய பொது நிதியிலிருந்து ரூ.182.30 லட்சம் மதிப்பீட்டில் பயணியர் நிழற்குடை, தார்சாலை அமைத்தல், சிமெண்டு சாலை மேம்பாடு செய்தல், சமுதாய கூடத்தில் மின் வசதி, இரும்பு கதவுகள், ஜன்னல் அமைத்தல், வாய்க்காலில் தடுப்பு சுவர் கட்டுதல், மினி டேங்க் அமைத்தல், இ சேவை மையம் கட்டிடத்தில் பழுது நீக்குதல் ஆகிய பணிகளை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டது.கூட்டத்தில் ஒன்றிய பொறியாளர் சரவணன், அனைத்து ஒன்றிய கவுன்சிலர்கள், மேலாளர் விஜயகுமார், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.