100 நாள் வேலையை முறையாக வழங்கக்கோரி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முற்றுகை


100 நாள் வேலையை முறையாக வழங்கக்கோரி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முற்றுகை
x

100 நாள் வேலையை முறையாக வழங்கக்கோரி கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை பெண்கள் முற்றுகையிட்டனர்.

கரூர்

முற்றுகை

கரூர் மாவட்டத்தில் உள்ள கிராம ஊராட்சி பகுதிகளில் 100 நாள் வேலைத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த வேலை திட்டத்தில் கிராமப்புறங்களில் வேலையின்றி இருக்கும் ஆண்களும், பெண்களும் சேர்ந்து வேலை செய்து கூலி பெற்று வருகின்றனர்.

இந்த வேலை திட்டத்திற்காக அட்டை பெற்றுள்ள பயனாளிகளுக்கு 100 நாள் வேலை வழங்காமல் குறைந்த நாட்களே வேலை வழங்குவதாக கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட சிந்தலவாடி ஊராட்சியை சேர்ந்த பெண்கள் நேற்று முன்தினம் கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பேச்சுவார்த்தை

இதுகுறித்து தகவல் அறிந்த அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதில், அனைவருக்கும் உரிய முறையில் வேலை வழங்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.


Next Story