ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம்


ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம்
x

சோளிங்கர் ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் நடைபெற்றது.

ராணிப்பேட்டை

சோளிங்கர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில், ஒன்றியக்குழு கூட்டம், ஒன்றியக்குழு தலைவர் கலைக்குமார் தலைமையில் நடைபெற்றது. துணைத் தலைவர் பூங்கொடி ஆனந்தன், வட்டார வளர்ச்சி அலுவலர் தனசேகரன், மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஊராட்சிகளில் சிமெண்டு சாலை, கழிவுநீர் கால்வாய், சிறு பாலம், குடிநீர் பைப் லைன் விரிவாக்க பணிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ரூ.1 கோடியே 10 லட்சத்தில் செய்ய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

பொதுமக்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்க வேண்டும், நீர்நிலைகளை மேம்படுத்த வேண்டும், கால்வாய்களை தூர்வார வேண்டும், கொசு மருந்து தெளிக்க வேண்டும் ென கூட்டத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது. ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி நல அலுவலர் அன்பரசி, குழந்தைகள் வளர்ச்சி அலுவலகம் கட்ட கோரிக்கை வைத்தனர். இதில் ஒன்றியக் குழு உறுப்பினர்கள், தலங்கை மாரிமுத்து, வெங்கப்பட்டு ராமன,் செங்கல்நத்தம் பிச்சாண்டி, போளிப்பாக்கம் ஆ.மா.கிருஷ்ணன், கொடைக்கல் கார்த்தி உள்பட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story