பஞ்சாயத்து தலைவர்கள் கலந்தாய்வு கூட்டம்
நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் பஞ்சாயத்து தலைவர்கள் கலந்தாய்வு கூட்டம் நடந்தது.
நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் கிராம பஞ்சாயத்து தலைவர்கள் கலந்தாய்வு கூட்டம் நேற்று நடைபெற்றது. கலெக்டர் கார்த்திகேயன் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
அயோத்திதாசர் குக்கிராமங்கள் மேம்பாட்டு திட்டம், கணினி இயக்குபவர்கள் இணையவழியாக வெளியில் இருந்து பஞ்சாயத்தில் பணி அமர்த்தப்படுதல், இணையதள வரி வசூல், இணையதளம் மூலம் கட்டிட உரிமை வழங்குதல், 14 மற்றும் 15-வது நிதிக்குழு மானிய திட்டத்தின் கீழ் ஒதுக்கீடு செய்யப்படும் பணிகள செயல்படுத்துதல், பஞ்சாயத்து தலைவர்களுக்கான பயிற்சியில் முறையாக கலந்து கொள்ளுதல், நிலுவையில் உள்ள மின் கட்டணம் செலுத்துதல், பழுதடைந்த கட்டிடங்களை இடித்து அப்புறப்படுத்துதல், முறையாக குளோரின் கலந்து குடிநீர் வழங்குதல், பஞ்சாயத்துகளில் தூய்மை பணிகள் மேற்கொள்ளுதல் மற்றும் டெங்கு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல், கிராம வளர்ச்சி திட்டம் ஆகியவை குறித்து ஆலோசிக்கப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.