வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்து விதிமுறைகள் குறித்த துண்டு பிரசுரங்கள்
வாணியம்பாடி-புதூர் பகுதியில் வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்து விதிமுறைகள் குறித்த துண்டு பிரசுரங்களை போலீசார் வழங்கினர்.
திருப்பத்தூர்
வாணியம்பாடி
திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட் ஜான், மாவட்டத்தில் விபத்துக்களால் உயிரிழப்பு ஏற்படாமல் தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
அவரது வழிகாட்டுதலின்படி வாணியம்பாடி - திருப்பத்தூர் சாலையில் உள்ள புதூர் பகுதியில் வாணியம்பாடி போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமணன் தலைமையில் போலீசார்,
அவ்வழியாக சென்ற வாகனங்களை நிறுத்தி வாகன ஓட்டிகளிடம், விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்பினை குறைக்க வாகன ஒட்டிகள் அனைவரும் கட்டாயம் தலைகவசம் அணிய வேண்டும் எனவும், போக்குவரத்து விதிகளை பின்பற்ற வேண்டும் எனவும் அறிவுறுத்தி துண்டு பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
Related Tags :
Next Story