பல்பாக்கி ஓங்காளியம்மன் கோவில் தேரோட்டம்திரளான பக்தர்கள் பங்கேற்பு


பல்பாக்கி ஓங்காளியம்மன் கோவில் தேரோட்டம்திரளான பக்தர்கள் பங்கேற்பு
x

பல்பாக்கி ஓங்காளியம்மன் கோவில் தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

சேலம்

ஓமலூர்,

ஓங்காளியம்மன் கோவில்

சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த பல்பாக்கி ஓங்காளியம்மன், மகமாரியம்மன் கோவில் தேரோட்ட விழா கடந்த மாதம் 17-ந் தேதி தொடங்கியது. தொடர்ந்து மகமாரியம்மன் கோவிலில் கம்பம் நடுதல், ஆய்க்கால் நடுதல், பொடாரியம்மன் பூஜை, சக்தி அழைத்தல் ஆகியன நடந்நதது.

நேற்று முன்தினம் இரவு 11 மணிக்கு செல்வ கணபதி அலங்காரம், மகமாரியம்மன் அலங்காரம், காளியம்மன் அலங்காரம் நடந்தது. நேற்று காலை 9 மணிக்கு ஓம் காளியம்மன், மகமாரியம்மன் சிங்க வாகனம், குதிரை வாகனம், பூசோடனை நிகழ்ச்சி நடந்தது.

தேரோட்டம்

தொடர்ந்து மாலை 5 மணி அளவில் ஓம் காளியம்மன் தேரோட்ட விழா நடந்தது. இதில் ஓமலூர் வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் பாலசுப்பிரமணியம், பல்பாக்கி ஊராட்சி தலைவர் சந்திரா மாணிக்கம், மாவட்ட தி.மு.க. துணை செயலாளர் திருநாவுக்கரசு, ஒன்றிய அவைத்தலைவர் ஜெயவேல், ஒன்றிய பொருளாளர் ரமேஷ் இளஞ்செழியன் உள்பட ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர்.

மாலை 6 மணிக்கு வண்டி வேடிக்கையும், அக்னி கரகம், பூங்கரகம் நிகழ்ச்சியும் நடந்தது.

மகமாரியம்மன் கோவில்

தொடர்ந்து இன்று (வியாழக்கிழமை) மகமாரியம்மன் தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடக்கிறது. இதில் மணி எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ. பல்பாக்கி கிருஷ்ணன், தாசில்தார் வல்ல முனியப்பன், துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கீதா ஆகியோர் தேர் வடம் பிடித்து இழுத்தனர். இரவு 8 மணிக்கு கலை நிகழ்ச்சி நடக்கிறது.

நாளை (வெள்ளிக்கிழமை) மதியம் 2 மணிக்கு மகமாரியம்மன், கரகம், காவடி, மாவிளக்கு பூஜை நடக்கிறது. இரவு 6 மணிக்கு அக்னி கரகம், பூங்கரகம், மாவிளக்கு பூஜையும் நடக்கிறது. இரவு 10 மணிக்கு சந்தாபரணம் அம்மன் புஷ்பலக்கில் வீதி உலா நடந்தது. வாண வேடிக்கை, நையாண்டி மேளம், கரகாட்டம் நிகழ்ச்சி நடக்கிறது. 4-ந் தேதி மஞ்சள் நீராட்டுதல், சாமி மரமழை அபிஷேக பூஜையும் நடக்கிறது.

ஏற்பாடுகளை செயல் அலுவலர் ஜெயச்சந்திரன், தக்கார் பரமேஸ்வரன் மற்றும் விழா குழுவினர் செய்துள்ளனர்.


Next Story