பாளையங்கோட்டை யூனியன் கூட்டம்


பாளையங்கோட்டை யூனியன் கூட்டம்
x

பாளையங்கோட்டை யூனியன் கூட்டம் நடந்தது.

திருநெல்வேலி

பாளையங்கோட்டை யூனியன் கூட்டம் யூனியன் அலுவலகத்தில் நடைபெற்றது. யூனியன் தலைவர் தங்கபாண்டியன் தலைமை தாங்கினார். துணை தலைவர் முரளிதரன் முன்னிலை வகித்தார்.

வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாலசுப்பிரமணி, மணி ஆகியோர் வரவேற்றனர். இதில் கவுன்சிலர்கள் முத்துக்குமார், பேச்சியம்மாள், திருப்பதி, தெய்வானை, ராமலட்சுமி முருகன், ராஜாராம், சரஸ்வதி செல்வசங்கர், ராமகிருஷ்ணன், நம்பிராஜன், பூலம்மாள் மற்றும் பஞ்சாயத்து தலைவர்கள் திடியூர் பாலசுப்பிரமணியன், காளி, சுடலைமுத்து மற்றும் இசக்கிப்பாண்டி, செல்லத்துரை, சுரேஷ், மணி, நம்பி பண்ணையார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் ஜோதிபுரம்-ஆரைகுளம் சாலை பணிகள் விரைவில் தொடங்கப்படும். குடிநீர் பணிகள் வேகப்படுத்தப்படும். ஒவ்வொரு கவுன்சிலர்களுக்கும் வளர்ச்சி நிதிக்காக தலா ரூ.4 லட்சம் வீதம் ரூ.56 லட்சம் ஒதுக்கீடு செய்யப்படுகிறது என்று யூனியன் தலைவர் தங்கபாண்டியன் பேசினார். இதற்கு கவுன்சிலர்கள் நன்றி தெரிவித்து பேசினார்கள். கூட்டத்தில் பாளையங்கோட்டை மத்திய ஒன்றிய தி.மு.க செயலாளர் போர்வெல் கணேசன், யூனியன் மேலாளர் திராவிடமணி மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story