பாலக்கோடு அருகே தரைப்பாலத்தில் தேங்கும் நீரால் மாணவர்கள் அவதி


பாலக்கோடு அருகே  தரைப்பாலத்தில் தேங்கும் நீரால் மாணவர்கள் அவதி
x
தினத்தந்தி 4 Nov 2022 12:15 AM IST (Updated: 4 Nov 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

பாலக்கோடு அருகே தரைப்பாலத்தில் தேங்கும் நீரால் மாணவர்கள் அவதி

தர்மபுரி

பாலக்கோடு:

பாலக்கோடு அருகே ரெட்டியூர் கிராமத்தையொட்டி 6 வழிச்சாலை அமைக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி ரெட்டியூர்- சமத்துவபுரம் இணைக்கும் பகுதியில் தரைப்பாலம் அமைக்கப்பட்டது. இந்த பாலம் மிகவும் தாழ்வாக உள்ளதால் மழைக்காலங்களில் தண்ணீர் 3 அடி உயரத்திற்க்கு தேங்கி நிற்கிறது. மேலும் சமத்துவபுரம் விவசாய நிலங்களில் இருந்து வெளியேறும் நீரானது இந்த பாலத்தின் அடியில் தேங்கி நிற்கிறது. இதனால் அந்த வழியாக காலை, மாலை வேளைகளில் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள் தண்ணீரில் நடந்து சென்று வருவதால் கால்களில் சேற்று புண் ஏற்பட்டு அவதியடைந்து வருகின்றனர்.

இதுகுறித்து சாலை அமைக்கும் ஒப்பந்ததாரர், மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிகிறது.


Next Story