மேட்டுப்பாளையம் பாளையத்தம்மன் கோவிலில் சித்திரை திருவிழா

மேட்டுப்பாளையம் பாளையத்தம்மன் கோவிலில்  சித்திரை திருவிழா
x

மேட்டுப்பாளையம் பாளையத்தம்மன் கோவிலில் சித்திரை திருவிழா

திருவாரூர்

திருத்துறைப்பூண்டி அருகே உள்ள மேட்டுப்பாளையம் ஆதி வடக்கு தெருவில் பாளையத்தம்மன், மதுரைவீரன் கோவில் உள்ளது. இக்கோவிலில் சித்திரை திருவிழா காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் தொடங்கி நடந்து வந்தது. விழாவில் நேற்று சாமிக்கு மாவிளக்கு போடுதல், காவடி எடுத்தல், அர்ச்சனை செய்தல், முடி இறக்குதல் உள்ளிட்டவை நடந்தது. இரவு 7 மணி அளவில் சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வீதி உலா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.

Next Story