பெயிண்டிங் காண்ட்ராக்டர் அசோசியேசன் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா
பெயிண்டிங் காண்ட்ராக்டர் அசோசியேசன் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா நடைபெற்றது.
பெரம்பலூர் மாவட்ட தமிழ்நாடு பெயிண்டிங் காண்ட்ராக்டர் அசோசியேசனின் 4-ம் ஆண்டு தொடக்க விழா மற்றும் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா பெரம்பலூர் புதிய பஸ் நிலையம் அருகே ஆர்.சி.ஆர். ஓட்டலில் நடந்தது. விழாவில் அசோசியேசனின் பெரம்பலூர் மாவட்ட புதிய தலைவராக விஜயகுமார், செயலாளராக நடராஜன், பொருளாளராக பன்னீர்செல்வம், துணைத் தலைவராக சேகர், துணை செயலாளராக ராஜேந்திரன், துணை பொருளாளராக தினகரன் உள்ளிட்டோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். புதிதாக தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகளுக்கு அசோசியேசன் மாநில தலைவர் ஜி.பன்னீர்செல்வம், பொதுச் செயலாளர் செல்வராஜ், பொருளாளர் ராஜன் ஆகியோர் பதவி பிரமானம் செய்து வைத்து பேசினர். அசோசியேசனின் துணைத் தலைவர் தங்கவேல், துணை பொதுச் செயலாளர் ஆரோக்கியராஜ், மாநில தொழிலாளர்கள் நல அமைப்பாளர் குழந்தைவேல், மாநில பொதுக்குழு உறுப்பினர் சுரேஷ்குமார் மற்றும் பெரம்பலூர், கோவை, ஈரோடு, கரூர் கிழக்கு, மேற்கு, விருதுநகர் ஆகிய மாவட்ட நிர்வாகிகளும், உறுப்பினர்களும், பொள்ளாச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து கிளை நிர்வாகிகளும், பெரம்பலூர் மாவட்ட கட்டிட பொறியாளர்கள் அசோசியேசன் தலைவர் ராஜாராம் மற்றும் ஹார்டுவேர்ஸ் உரிமையாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். விழாவில் தமிழ்நாடு பெயிண்டிங் காண்ட்ராக்டர் அசோசியேஷனுக்கு கொடி அறிமுகப்படுத்தப்பட்டது. மாநிலம் முழுவதும் உள்ள பெயிண்டிங் தொழிலாளர்கள் பணி செய்யும் போது அல்லது விபத்திலோ இறக்க நேரிட்டாலோ அல்லது நிரந்தர ஊனம் ஏற்பட்டாலோ ரூ.20 லட்சம் தமிழக அரசு இழப்பீடு வழங்க வேண்டும். பெயிண்டிங் தொழில் சார்ந்த விஷயங்கள் மற்றும் தொழிலாளர்களின் வேலைகள் பற்றிய விவரங்களை பள்ளிக்கல்வித்துறை மூலம் பாடங்களில் சேர்க்க வேண்டும். பெயிண்டிங் தொழில் முனைவோருக்கு தனி நல வாரியம் தமிழக அரசு அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் விழாவில் நிறைவேற்றப்பட்டன.