மாணவா்களுக்கு ஓவியம், வினாடி-வினா போட்டி


மாணவா்களுக்கு ஓவியம், வினாடி-வினா போட்டி
x

வன உயிரின வாரவிழாவையொட்டி மாணவா்களுக்கு ஓவியம், வினாடி-வினா போட்டி நடைபெற்றது.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்ட வனத்துறை சார்பில் வன உயிரின வாரவிழாவையொட்டி கலவையை அடுத்த அரும்பாக்கம் நெடுஞ்சாலையில் உள்ள ஆதிபராசக்தி வேளாண்மை கல்லூரியில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான ஓவியம், வினாடி-வினா மற்றும் சொற்பொழிவு ஆகிய போட்டிகள் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட வன அலுவலர் கலாநிதி தலைமை தாங்கினார். மாவட்ட வனப்பாதுகாவலர் சுஜாதா, வனச்சரகர்கள் சரவணபாபு, ராஜா, வெங்கடேசன், பசுமை தோழர் ஏஞ்சலின், ஆதிபராசக்தி வேளாண் கல்லூரி முதல்வர் தனுநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பள்ளி, கல்லூரி மாணவர்கள் பங்கேற்றனர். ஓவியப்போட்டி வனவிலங்கு பாதுகாப்பு என்ற தலைப்பில் 6 பிரிவுகளிலும், வினாடி-வினா போட்டி சுற்றுச்சூழல் காடு மற்றும் வனவிலங்கு என்ற கருப்பொருளில் குழு அளவிலும், சொற்பொழிவு 3 பிரிவுகளிலும் நடைபெற்றது.

போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சார்பில் பரிசுகள் மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. இதில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story