ஓவியர் நலச்சங்க கூட்டம்
ஆறுமுகநேரியில் ஓவியர் நலச்சங்க கூட்டம் நடந்தது.
தூத்துக்குடி
ஆறுமுகநேரி:
தூத்துக்குடி மாவட்ட ஒன்றிணைவோம் பெயிண்டர்கள் மற்றும் ஓவியர்கள் நலச்சங்க மாவட்ட உறுப்பினர்கள் கூட்டம் ஆறுமுகநேரியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் உச்சிமாகாளி தலைமை தாங்கினார். கூட்டத்தில் உறுப்பினர்கள் சேர்க்கை மற்றும் சங்க உறுப்பினர் அனைவருக்கும் காப்பீடு திட்டம் வழங்குவது குறித்து தீர்மானங்கள் இயற்றப்பட்டன.
கூட்டத்தில் மாவட்ட பொருளாளர் ரீபாய்தீன், ஆறுமுகநேரி பகுதி பொறுப்பாளர்கள் ராஜேஷ், ரமேஷ், இசக்கிமுத்து, கண்ணன், காயல்பட்டினம் பொறுப்பாளர்கள் சக்தி, கண்ணன், திருச்செந்தூர் ஒன்றிய பொறுப்பாளர் ஜெயராமன், முத்தையாபுரம் பொறுப்பாளர் கனகராஜ், கருங்குளம் பொறுப்பாளர் மணிகண்டன், ஏரல் நகரத் தலைவர் செந்தில், உட்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் உறுப்பினர்கள் சேர்க்கை படிவம் அனைவருக்கும் புதிதாக வழங்கப்பட்டது.
Related Tags :
Next Story