மின்சாரம் பாய்ந்து பெயிண்டர் சாவு


மின்சாரம் பாய்ந்து பெயிண்டர் சாவு
x

மின்சாரம் பாய்ந்து பெயிண்டர் உயிரிழந்தார்.

அரியலூர்

ஜெயங்கொண்டம்:

பெயிண்டர் சாவு

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள பாப்பாங்குளம் கிராமத்தை சேர்ந்த ரவியின் மகன் கார்த்திக்(வயது 30). பெயிண்ட் அடிக்கும் தொழிலாளி. இவர் நேற்று கழுவந்தோண்டி கிராமத்தில் கட்டிடம் ஒன்றில் வெள்ளை அடிக்கும் பணியில் ஈடுபட்டார். அப்போது அந்த கட்டிடத்தின் மேற்பகுதியில் சுவரை உரசியவாறு சென்ற மின் கம்பி, கார்த்தி மீது உரசியது.

இதில் மின்சாரம் பாய்ந்து அவர் கீழே விழுந்தார். இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம், பக்கத்தில் இருந்தவர்கள், அவரை மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

கோரிக்கை

இந்நிலையில் இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், மின்கம்பிகள் வீடுகளின் குறுக்கே செல்வதால் தொடும் தூரத்தில் உள்ளது. மின்கம்பிகள் உரசி தீப்பொறி ஏற்படுகிறது. இதனால் வீடுகளில் குழந்தைகளுடன் அச்சத்துடன் இருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. மின்கம்பிகள் உரசி தீப்பொறி ஏற்பட்டதில் வைக்கோல் போர் உள்ளிட்டவை எரிந்து நாசமாகியுள்ளது. எனவே ஆபத்தான நிலையில் உள்ள இந்த மின் கம்பிகள் மற்றும் கம்பங்களை இடம் மாற்றி அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை விடுத்தனர். மின்சாரம் பாய்ந்து பெயிண்டர் இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Next Story