பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நர்சிங் கல்லூரியில்மாணவிகளுக்கு முதலுதவி பயிற்சி


பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நர்சிங் கல்லூரியில்மாணவிகளுக்கு முதலுதவி பயிற்சி
x
தினத்தந்தி 22 March 2023 12:15 AM IST (Updated: 22 March 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நர்சிங் கல்லூரியில் மாணவிகளுக்கு முதலுதவி பயிற்சி அளிக்கப்பட்டது.

தூத்துக்குடி

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நர்சிங் கல்லூரியில் முதலாமாண்டு மாணவிகளுக்கான முதலுதவி பயிற்சி 2 நாட்கள் நடந்தது. கல்லூரி முதல்வர் கலைக்குருச்செல்வி வரவேற்றார். இதில், செஞ்சிலுவை சங்கம் மற்றும் புனித ஜான்ஸ் ஆம்புலன்ஸ் நிறுவனத்தின் பயிற்சியாளர்கள் சந்தானம், வைரவராஜ் ஆகியோர் கலந்துகொண்டு மாணவிகளுக்கு முதலுதவி பயிற்சி அளித்தனர். இதில், முதலுதவி என்றால் என்ன, சூழ்நிலைகளை எப்படி கையாள்வது, விரைந்து செயல்படுவது எப்படி, சிறிய மற்றும் பெரிய காயங்களை கண்டறிவது எப்படி, காயமடைந்தவர்களை ஆஸ்பத்திரிக்கு அழைத்துசெல்வது எப்படி, இதயம் நுரையீரல் செயல்படாமல் நின்று போனால் புத்துயிர் கொடுப்பது எப்படி? போன்ற பயிற்சிகள் வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து மாணவிகளுக்கு செயல்முறை பயிற்சியும் வழங்கப்பட்டது. முன்னதாக கல்லூரி துணை முதல்வர் பெண்ணரசி, பயிற்சியாளர்களுக்கு நினைவு பரிசினை வழங்கினார். நிகழ்ச்சியை இணை பேராசிரியர்கள் சங்கீதா, வனிஷா ஆகியோர் தொகுத்து வழங்கினர். முடிவில், மருத்துவ பயிற்றுவிப்பாளர் டெனுஷா செல்லம் நன்றி கூறினார்.


Next Story