நெல் கொள்முதல் நிலைய பணியாளர்களுக்கு பயிற்சி
நெல்லையில் நெல் கொள்முதல் நிலைய பணியாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
நெல்லை மாவட்ட அரசு நேரடி நெல் கொள்முதல் நிலைய பணியாளர்களுக்கு பயிற்சி முகாம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் செந்தில்குமார் தலைமை தாங்கி பேசினார்.
நெல்லை மாவட்டத்தில் நடப்பு பிசான பருவத்தில் நெல் பயிரிடப்பட்ட பகுதிகளில் விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்யும் பொருட்டு மாவட்டத்தில் 62 இடங்களில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி, நெல் கொள்முதல் செய்யும் நிலையங்களில் பணிபுரியும் பருவகால பட்டியல் எழுத்தர்கள், உதவுபவர்கள் மற்றும் காவலர்கள் ஆகிய பணி நிலைகளில் தேர்வாகிய பணியாளர்களுக்கான பணி ஒதுக்கீடு மற்றும் பயிற்சி நடைபெற்றது. இந்த பயிற்சியில் 40 பருவகால பட்டியல் எழுத்தர்கள், 45 பருவகால உதவுபவர்கள் மற்றும் 39 பருவகால காவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
இதில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிய கழக மண்டல மேலாளர் காண்டீபன், துணை மேலாளர் (தரக்கட்டுப்பாடு) பொன்னுச்சாமி, கலெக்டரிடன் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) சுப்பையா, மாவட்ட வழங்கல் அலுவலர் வள்ளிகண்ணு உள்பட பலர் கலந்து கொண்டனர்.