நெல் கொள்முதல் நிலையம் திறப்பு
நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டது.
பொன்னமராவதி:
பொன்னமராவதி அருகே ஆலவயலில் கடந்த ஆண்டை போல இந்த ஆண்டும் நெல் கொள்முதல் நிலையம் திறக்க வேண்டும் என இப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்தநிலையில் ஆலவயல் கருமங்காட்டில் நெல் கொள்முதல் நிலையம் தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகின்றது. நெல் சாகுபடி செய்து வைத்துள்ள விவசாயிகள், கிராம நிர்வாக அலுவலரிடம் அடங்கல் சான்று பெற்று, அதனுடன் ஆதார்கார்டு, ரேஷன்கார்டு, வங்கி புத்தகம் ஆகியவைகளின் நகல் ஆகியவற்றுடன் ஆலவயல் கருமங்காட்டில் செயல்பட்டு வரும் நெல் கொள்முதல் நிலையத்தில் கொடுத்து பதிவு செய்து அரசு நிர்ணயித்த விலையில் நெல்லை விற்பனை செய்து பயன்பெறலாம் என்று கூறப்பட்டுள்ளது. இதனை ஆலவயல், கண்டியாநத்தம், அம்மன்குறிச்சி, இடையாத்தூர், கொப்பனாபட்டி, தூத்தூர், மைலாப்பூர், பகவாண்டிப்பட்டி, நகரப்பட்டி, கல்லம்பட்டி உள்ளிட்ட பகுதி விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.