நெல் அரவை ஆலை உரிமையாளர்கள் கூட்டம்
தென்காசியில் நெல் அரவை ஆலை உரிமையாளர்கள் கூட்டம் நடந்தது.
குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை மதுரை மண்டல போலீஸ் சூப்பிரண்டு சினேகா பிரியா தலைமையில் தென்காசி மாவட்ட நெல் அரவை ஆலை உரிமையாளர்கள் கூட்டம் தென்காசியில் நடந்தது.
நெல் அரவை செய்து கொடுப்பதில் முறைகேடுகள் எதுவும் நடக்காமல் ஆலைகளை நடத்துமாறும், முறைகேடுகள் எதுவும் நடந்தால் ஆலையின் உரிமம் ரத்து செய்யப்படும் என்பதையும், நெல் அரவை ஆலைகளில் முறையாக பதிவேடுகள் பராமரிப்பதற்கும் அறிவுரை வழங்கப்பட்டது.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பத்மாவதி, மாவட்ட வட்ட வழங்கல் அலுவலர் சுதா, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக மேலாளர் ராஜேஷ், தென்காசி மாவட்ட கூட்டுறவு இணைப்பதிவாளர் லட்சுமண குமார், குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை துணை போலீஸ் சூப்பிரண்டுகள் முத்துக்குமார், சுரேஷ்குமார், பாலசுப்பிரமணியன், இன்ஸ்பெக்டர் கலா மற்றும் தாசில்தார்கள், தரக்கட்டுப்பாடு அலுவலர்கள் மற்றும் 21 நெல் அரவை ஆலை உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.