கனமழையால் சாய்ந்த நெற்பயிர்கள்
சேத்தூர் பகுதிகளில் கனமழையால் நெற்பயிர்கள் சாய்ந்தன. இதனால் விவசாயிகள் வேதனையில் உள்ளனர்.
ராஜபாளையம்,
சேத்தூர் பகுதிகளில் கனமழையால் நெற்பயிர்கள் சாய்ந்தன. இதனால் விவசாயிகள் வேதனையில் உள்ளனர்.
சாய்ந்த பயிர்கள்
ராஜபாளையம் அருகே சேத்தூர், தேவதானம், கோவிலூர், சொக்கநாதன் புத்தூர், சோலைசேரி, கிருஷ்ணாபுரம், தெற்கு வெங்காநல்லூர் ஆகிய பகுதிகளில் நெற்பயிர்கள் அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளது. இந்தநிலையில் இந்த பகுதியில் கனமழை பெய்தது. இதனால் நெற்பயிர்கள் சில இடங்களில் சாய்ந்து சேதமடைந்து காணப்படுகிறது.
அறுவடைக்கு தயாராக இருந்த விளைந்த நெற்பயிர்கள் வயல்களில் மழையால் சாய்ந்து உள்ளதால், அறுவடை பாதிப்பு ஏற்பட்டு விளைந்த நெற்பயிர்கள் உதிர தொடங்கி உள்ளதால் விவசாயிகள் கவலையில் உள்ளது.
நிவாரணம்
இதுகுறித்து தமிழக விவசாய சங்க மாவட்ட செயலாளர் அம்மையப்பன் கூறியதாவது:-
கடந்த சில தினங்களாக பெய்த கன மழையால் சேத்தூர் பகுதியில் பிராவகுடி, மனமச்சி, நடுவ குளம், வாழவந்தான், தேவதானம், பெரியகுளம், நகர குளம், உள்ளிட்ட விவசாய நிலங்களில் 500 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள பகுதியில் நெற்பயிர்கள் சாய்ந்தன.
இதனால் விவசாயிகள் மிகவும் வேதனையில் உள்ளனர். ஆதலால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பார்வையிட்டு உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.