தண்ணீரில் மூழ்கிய நெற்பயிர்.. எதிர்பாராத மழையால் விவசாயிகள் வேதனை...
மழை நீடித்தால் நெல்மணிகள் முளைக்கக்கூடும் என்பதால், விவசாயிகள் கவலையில் உள்ளனர்.
திருவாரூர்,
வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக டெல்டா, தென் மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது.
குறிப்பாக ராமநாதபுரம், வேதாரண்யம், திருச்சி, மயிலாடுதுறை, சிவகங்கை, தஞ்சாவூர், கும்பகோணம், மானாமதுரை, நாகை, புதுக்கோட்டை, கொடைக்கானல், நத்தம் உள்ளிட்ட இடங்களில் மழை பெய்தது.
திருவாரூரில் பெய்த மழை காரணமாக சம்பா மற்றும் தாளடி அறுவடை பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. மழை நீடித்தால் நெல்மணிகள் முளைக்கக்கூடும் என்பதால், விவசாயிகள் கவலையில் உள்ளனர்.
நாகை மாவட்டத்தில் மழை காரணமாக அறுவடைக்கு தாயாராக இருந்த 40 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் வயலில் சாய்ந்ததால், விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர். இதனால் ஏக்கருக்கு 25 ஆயிரம் இழப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story