விபத்தில் காயம் அடைந்த பாதயாத்திரை பக்தர் சாவு
ஆலங்குளம் அருகே விபத்தில் காயம் அடைந்த பாதயாத்திரை பக்தர் பரிதாபமாக இறந்தார்.
ஆலங்குளம்:
ஆலங்குளம் ராஜூநகரை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் மகன் சங்கர் (வயது 43). இவர் ஆலங்குளம் காய்கறி சந்தையில் கூலி தொழிலாளியாக வேலை செய்து வந்தார். சம்பவத்தன்று மாலை இவர் தனது குடும்பத்துடன் ஆலங்குளத்தில் இருந்து திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு பாதயாத்திரையாக புறப்பட்டு சென்றார். சிவலார்குளம் விலக்கு அருகே சென்றபோது, அவருக்கு பின்னால் வந்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக அவர் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த சங்கரை அக்கம்பக்கத்தினர் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ஆலங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த கீழக்கரும்புளியூத்தை சேர்ந்த அன்பு மலரகன் (55) என்பவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.