பதநீர், நுங்கு விற்பனை அமோகம்


பதநீர், நுங்கு விற்பனை அமோகம்
x

ஸ்ரீவில்லிபுத்தூரில் சுட்டெரிக்கும் வெயிலினால் பதநீர், நுங்கு ஆகியவற்றின் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது.

விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூர்,

ஸ்ரீவில்லிபுத்தூரில் சுட்டெரிக்கும் வெயிலினால் பதநீர், நுங்கு ஆகியவற்றின் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது.

கடுமையான வெயில்

ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால் மதிய வேலைகளில் சாலைகளில் பொதுமக்கள் நடமாட்டம் வெகுவாக குறைந்துள்ளது.

வெப்பத்தை தணிக்க ஆங்காங்கே இளநீர், தர்ப்பூசணி பழங்கள் விற்பனை விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. அதேபோல பதநீர் விற்பனையும் அதிகரித்து, உள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் எண்ணற்ற பனை மரங்கள் உள்ளன.

இங்குள்ள பதநீர், நுங்கு ஆகியவற்றிற்கு தனிச்சுவை உண்டு. தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் பதநீர் விற்பனை அதிகரித்து உள்ளது.

2,500 குடும்பங்கள்

இதுகுறித்து பதநீர் வியாபாரிகள் கூறியதாவது:-

ஸ்ரீவில்லிபுத்தூர், மம்சாபுரம், சாலியன் தோப்பு, செண்பகத்தோப்பு, காந்திநகர், திருவண்ணாமலை, ராஜபாளையம், மலை அடிவாரப்பகுதி மொட்டப்பத்தான், வத்திராயிருப்பு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் எண்ணற்ற பனை மரங்கள் உள்ளன.

இந்த பனைமர தொழிலை நம்பி ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் 2,500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் உள்ளனர். இவர்களின் அன்றாட வாழ்க்கை பனைமரம் ஏறுவது, பதநீர் இறக்குவது ஆகும். அத்துடன் பதநீர் விற்பனை மற்றும் கருப்பட்டி, பனங்கற்கண்டு தயாரிப்பு போன்ற தொழில்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

ரூ.50-க்கு விற்பனை

ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதிகளில் கடும் வெயில் அடித்து வருகிறது. இதனால் பதநீர், நுங்கு, தர்ப்பூசணி ஆகியவற்றின் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது.

ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதிகளில் 1 லிட்டர் பதநீர் ரூ.50-க் கும், ஒரு நுங்கு ரூ.8-க்கும் விற்கப்படுகிறது. பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் பதநீர் மற்றும் நுங்குகளை விரும்பி வாங்கி சாப்பிடுகின்றனர். பனை ஓலையில் பதநீர் குடித்தால் அதன் சுவை மிகவும் ருசியாக இருக்கும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story